ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இரண்டு இடங்களில் வீட்டு கதவு உடைக்கப்பட்டது ஏழு லட்சம் ரூபாய் பணம் தப்பியது…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கிருஷ்ணன்கோவில் அங்குள்ள வட்டார மோட்டார் வாகன அலுவலகத்திற்கு அருகே வசித்து வருபவர் பாண்டியராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான இவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு 4,000 ஆயிரம் ரொக்க பணமும் மூன்று வெள்ளி செயின்களும் கொள்ளையர்களால் கொள்ளடிக்கப்பட்டது
இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியில ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அழகர்சாமி இவரின் வீட்டின் கதவை கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். வீட்டுக்குள் ஏழு லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இந்த நிலையில் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்த போது அந்த பகுதியில் வழியாக இரவு நேரத்தில் போலீசார் விசிலை ஓதிக்கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டு சென்று கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்து தப்பி ஓடினர்.

வீட்டில் இருந்தவர்கள் இது பற்றி கொடுத்த புகார் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் நடைபெற்ற கதவு உடைப்பு சம்பவத்திற்கு கிருஷ்ணன்கோவில் போலீசாரரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்ற கதவு உடைப்பு சம்பவத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் ரோந்து பணியின் காரணமாக கொள்ளையர்கள் வீட்டுக்குள் இருந்து விரைவாக சென்றதால் 7 லட்சம் ரூபாய் தப்பியது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
