கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப். (01.11.2026) இன்று மாலை அணிவித்து. மலர் தூவி மரியாதை செலுத்தி, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்-திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ம் தேதி இன்று அரசு விழாவாக கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு ஆணையிறப்பித்ததன் அடிப்படையில், தாய்தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைவதற்கு பாடுபட்டவர்களில் ஒருவரான குமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து. மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம். திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தபோது நமது தாய்த்தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட இன்றைய விளவங்கோடு, கல்குளம், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கிள்ளியூர், திருவட்டார் உள்ளிட்ட வட்டங்களை இணைப்பதற்கு அரும்பாடுபட்டவர்களில் குமரிதந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பணி முக்கியமானது. மார்ஷல் நேசமணி அவர்களுடன் இணைந்து போராடியவர்களில் பொன்னப்பன்நாடார். குஞ்சன்நாடார். சைமன். தாணுலிங்கநாடார். சிதம்பரநாதன். சிதம்பரம்பி மாதேவன்பி டேனியல் ஹுசைன், அப்துல்காதர், டாக்டர்.கிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பாரம்பரியமிக்க நமது கன்னியாகுமரி மண் தாய் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாக 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி நமது கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந் தற்போது 70 ஆண்டுகள் முடிந்து 71-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று நம்முடைய கன்னியாகுமரி மாவட்டமானது சமூக பொருளாதார வளர்ச்சியில் முன்னோக்கி உள்ளது. அதற்கு வித்திட்ட இரத்தம் சிந்திய தியாகிகள் மற்றும் போராடிய அனைத்து இரத்த சாட்சிகளையும் நாம் இந்நேரத்தில் வணங்குகிறோம் வாழ்த்துகிறோம். பலர் தங்கள் இன்னுயிரை ஈந்து. குறிப்பாக புதுக்கடை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒன்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்த வரலாறு இப்போராட்டத்தின் பின்னணியில் உள்ளது.

இதனை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் குமரி மாவட்டம் தாய்தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1-wம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம். வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி அவர்களின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மார்ஷல் நேசமணி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து. மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப். தெரிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப். நாகர்கோவில் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள குமரி கோமேதகம் ஆர்.பொன்னப்பநாடார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) .மேரி பிரின்சி லதா. நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்வேல் முருகன். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாஜாண் ஜெகத் பிரைட் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்சந்திரகுமார், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம். மார்ஷல் நேசமணி அவர்களின் மகன்வழி பேரன் திரு.ரெஞ்சித் அப்பலோஸ். .தமயந்தி நளதம், பொன்னப்பநாடார் அவர்களின் மகன் வழக்கறிஞர் பொன் கிருஷ்ணகுமார். வாரிசுகள் நாகர்கோவில் மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாதவன். மாநகராட்சி உறுப்பினர்கள் விஜிலா ஜஸ்டஸ், .நவீன் குமார். அக்ஷயா கண்ணன், முன்னாள் காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு ன் சங்க தலைவர் ஆனந்த், வழங்கறிஞர்கள். சதாசிவம். அகஸ்தீசன், டதி மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
செய்திகள் : சுரேஷ் / எதிரொலி . இன் / 8939476777
