வத்திராயிருப்பில் மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 27 கிலோ குடகாவை பறிமுதல் செய்த போலீசார் தாய் மற்றும் இரண்டு மகன்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி முருகேஸ்வரி(55). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் வத்திராயிருப்பு போலீஸார் சோதனை செய்த போது, முருகேஸ்வரிக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் 2 கிலோ கஞ்சா, 27 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீஸார் முருகேஸ்வரி, அவரது மகன்கள் முத்து செல்வம்(33), பூமாரிமுத்து(29) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு குட்கா சப்ளை செய்த கோட்டையூரை சேர்ந்த விஜயகுமார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகேஸ்வரி மகன் பூமாரிமுத்து ராஜபாளையம் 11-வது பெட்டாலியனில் போலீசாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : சிவன்ராஜ் & சுந்தர்ராஜன் / விருதுநகர் / எதிரொலி / 8939476777
