பரமக்குடி – எமனேஸ்வரத்தில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து 25 நெசவாளர் குழுக்களுக்கு ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கைத்தறி , துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதியான எமனேஸ்வரம் ஜீவா நகரில் கைத்தறி துறை மூலம் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு , ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி துறை இயக்குநர் எஸ். அமிர்தஜோதி அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு கைத்தறி , துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையேற்று, சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து பேசியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் 2023-2024ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவுறுத்தியதின்படி, இதில் பரமக்குடி - எமனேஸ்வரம் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் சிறிய அளவிலான பூங்கா அமைக்க உத்தரவிட்டதன்படி அதற்கான பணிகள் துவங்கப்பட்டு ரூ.1.22கோடி மதிப்பீட்டில் சிறிய கைத்தறி பூங்கா நெசவாளர்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் , இத்திட்டத்திற்கு ரூ.2 கோடியில் இருந்து 5 கோடி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் , மேலும் ரூ.3.80 கோடி நிலுவையில் உள்ள தொகையில் பல்வேறு திட்டங்களை இச்சங்கத்தின் மூலம் விரிவுபடுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
இந்த சிறிய அளவிலான கைத்தறி பூங்காவின் நோக்கம் நெசவாளர்களுடைய தினசரி வருமானம் ரூ.1000 வரை பெற வேண்டுமாகும். அந்த வகையில் தற்போது இந்த சங்கத்தின் 40 நெசவாளர்கள் தறிநெய்யும் வகையில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வளாகத்தில் மேலும் 60 இயந்திரங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தற்பொழுது இதன் மூலம் 40 நெசவாளர்களுக்கு நேரடியான வேலைவாய்ப்பும், 90 நெசவாளர்களுக்கு மறைமுகமான வேலை வாய்ப்பும் கிடைக்கப்பெறும். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை வருவாய் கிடைத்திடும்.
இப்பூங்காவின் மூலம் ஆண்டு ஒன்றிருக்கு ரூ.2.50 கோடி அளவிற்கு உற்பத்தி , விற்பனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய அளவிலான கைத்தறி பூங்காவில் காட்டன் சேலை, வேஷ்டி, கைலி, பெட்சீட் போன்ற ஆடைகள் தயாரிக்கும் வகையில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெசவாளர்கள் எளிதாக பயன்பெறும் வகையில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களில் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் சேமிப்பு பாதுகாப்பு திட்டத்தில் முழு தொகையினை பெறுவதற்கு குறைந்தபட்ச கால அளவி ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கான 3 நிதி ரூ.2000 இருந்து ரூ.5000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு மானியத்திட்டம் ரூ.2.10 இலட்சத்திலிருந்து ரூ.4 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விலையில்லா மின்சாரம் 1000 யூனிட் வரை வழங்கப்படுகிறது. அதேபோல் கைத்தறி சங்கங்களில் உள்ள 406 தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்கப்பட்டுள்ளது. இதுபோல்

பூங்காவில் காட்டன் சேலை, வேஷ்டி, கைலி, பெட்சீட் போன்ற ஆடைகள் தயாரிக்கும் வகையில் இயந்திரங்கள் உள்ளன. இதன் மூலம் நெசவாளர்கள் எளிதாக பயன்பெறும் வகையில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை வழங்குகிறார்கள். அந்த வகையில் சேமிப்பு , பாதுகாப்பு திட்டத்தில் முழு தொகையினை பெறுவதற்கு குறைந்தபட்ச கால அளவினை 25 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கான இமச்சடங்கு நிதி ரூ.2000 முதல் ரூ.5000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு வீடு கட்ட மானியத்திட்டம் ரூ.2.10 இலட்சத்திலிருந்து ரூ.4 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விலையில்லா மின்சாரம் 1000 யூனிட் வரை வழங்கப்படுகிறது. மேலும் கைத்தறி சங்கங்களில் உள்ள 406 தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்கப்பட்டுள்ளது. இதுபோல் எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்குகிறார்கள். நெசவாளர்கள் தங்கள் சங்கங்கள் மூலம் அரசு திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென தமிழ்நாடு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
தொடர்ந்து , கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 05 பயனாளிகளுக்கு ரூ.21,600/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், சேமிப்பு , பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 05 பயனாளிகளுக்கு ரூ.3,43,760/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், முத்ரா திட்டத்தின்கீழ் 05 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 05 பயனாளிகளுக்கு ரூ.54,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், ஜக்கார்டு இயந்திரம் , தார் சுற்றும் இயந்திரம் 05 பயனாளிகளுக்கு ரூ.50,850/- மதிப்பீட்டிலும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.7,20,250 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் – காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி – செ.முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியை செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி திறம்பட தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில், கைத்தறி துறை கூடுதல் இயக்குநர்கள் தமிழரசி , மகாலிங்கம் , கைத்தறி துறை இணை இயக்குநர்கள் கணேஷன் , மாதேஷ்வரன் , பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி , பரமக்குடி நகர் மன்ற துணைத்தலைவர் கே.இ.குணசேகரன் , பரமக்குடி சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் மாதவன் , முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ், திட்டக்குழு உறுப்பினர் ஜீவரெத்தினம் , கைத்தறி துறை ஆய்வாளர் ரெத்தினபாண்டி , நகர்மன்ற உறுப்பினர் திரு.சீனிவாசன் உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட உதவி அலுவலர் நா.விஜயகுமார், எமனேஸ்வரம் சௌராஷ்டிரா சபை முன்னாள் தலைவர் சேஷய்யன், கைத்தறி நெசவாளர் சங்கத்தினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777
