நாகர்கோவில்: கோட்டார் நாராயண குரு மண்டபம் அருகே சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால், அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது.
இதனால் அவ்வழியாக சென்ற அரசு பேருந்து சகதியில் சிக்கியது. பேருந்தில் இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்து, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : சுரேஷ் : எதிரொலி 8939476777
