பீதியில் உள்ள கிராம மக்கள் கும்கி யானைகள் வரவழைத்து யானைகளை விரட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை…
பேரணாம்பட்டு அருகே ஐந்து காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி அட்டகாசம், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கள் பத்தலபல்லி எருக்கம்பட்டு கோட்டையூர் குண்டலபல்லி ரங்காம்பேட்டை கோகலூர் அரவாட்லா பாஸ்மார்பெண்டா கொத்தூர் போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இங்குள்ள வன விலங்குகள் உணவுகள் மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது அங்குள்ள விவசாய நிலங்களிலும் கிராமங்களிலும் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக முதலில் ஒற்றை யானை பிறகு குட்டியுடன் இரண்டு யானைகள் விவசா நிலங்களில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் இரவு பகல் என்று பாரமால் யானைகளை விரட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கவுன்டான்யா சரணாலயத்தில் இருந்து ஐந்து காட்டு யானைகள் எருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள சேகர், பாண்டுரங்கன், ரமேஷ்பாபு, லட்சுமணன், முனி ரத்தினம் என்பவர்களின் விவசாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு இருந்த வேர்க்கடலை, சோளம், தீவனம் பயிர்கள், 9 தென்னை மரக் கன்றுகள்,6 மா மரங்கள் அதன் கிளைகளை உடைத்து சாப்பிட்டு உள்ளது.

மேலும் நிலத்திற்கு பாதுகாப்பிற்க்காக போடப்பட்டு இருந்த கல் கம்பங்களையும் பைப் லைன் களையும் உடைத்து மிதித்து அங்கு பயிரிடப்பட்டு இருந்ததை சாப்பிட்டு சேதம் ஏற்படுத்தி இருந்து உள்ளது அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இது குறித்து அங்கு இரவு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் பேரில் பேரணாம்பட்டு வனச்சரகர் மோகன்வேல் வனவர்கள் இளையராஜா, கார்த்திக்,வனக் காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்களுடன் அங்கு விரைந்து சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்தி இருந்த ஐந்து காட்டு யானைகளை பானங்கள் விட்டு வெடித்தும் தீப்பந்தம் ஏந்தி கத்தி கூச்சலிட்டு விடிய விடிய ஆந்திரா மாநிலம் யானைகள் உள்ள கவுன்டான்யா சரணாலய வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர்.

மேலும், இது குறித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கூறுகையில் தொடர்ந்து இரவு நேரங்களில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து யானைகள் வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது மேலும் யானைகள் கிராமத்திற்க்குள்ளும் நிலத்திற்க்குள்ளும் வரதவாறு வனத்துறையினர் கும்கி யானைகளை வரவழைத்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : மூர்த்தி / எதிரொலி / 8939476777

