சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் 500 பேர் போராட்டம். பதவி உயர்வு, ஊதியக்குழு நிலுவைத் தொகை, தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள்

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டங்களாக தொடர் போராட்டங்களை நடத்தினர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள மாத ஓய்வூதத்தை உடனடியாக வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் என்.எம்.ஆர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர், ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசு நிறைவேற்றவில்லை.

 இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், ஊழியர்கள்  போராட்டம் நடத்தும்போதெல்லாம் அவர்களை உயர்கல்வித்துறை அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். ஆனாலும் இதுவரை அவர்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை. 

 இந்நிலையில் ஆசிரியர் ஊழியர்கள் இன்று முதல் தொடர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுமார் 500 பேர் இன்று பணிகளை புறக்கணித்தனர். பின்னர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் பந்தல் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  இன்று முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தினமும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர், ஊழியர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed