இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் ஜேஆர்சி,ஸ் கவுட் மாணவ , மாணவிகள் மண்டபம் கடலோர காவல் படையில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்காக சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள கடலோர காவல் படையினரால் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் சாரண, சாரணியர் இயக்க மாணவ மாணவிகளுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் தலைமையில் மண்டபத்தில் நடைபெறும் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதன் காக சென்றுள்ளனர். பொதுவாகவே ஜூனியர் ரெட் கிராஸ் (இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்) இது பள்ளி, கல்லூரிகளின் மாணவர்களுக்கான ஒரு தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பில் மனித நேயம், சுகாதாரம், சேவை மனப்பான்மை மற்றும் சர்வதேச நட்புறவு நற்பண்பு, இயற்கை பாதுகாப்பு மற்றும் முதல் உதவு போன்ற திறமைகளை கற்று தருதல்ஆ கியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு அமைப்பாகும், அதே போன்று சாரனர், சாரணியர் இயக்கம் என்பதும் சமூக சேவை, தலைமைபன்பு, வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் சிறந்த குடிமக்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல நல்ல கோட்பாடுகளை கொண்டு செயல்படக்கூடிய ஒரு அமைப்பாகும் இந்த அமைப்புகளில் உள்ள மாணவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் சிறந்த சமூக நலன் காப்பவர்களாக சிறந்த மனித நேயம் மிக்கவர்களாகவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையை வளர்க்கும் விதமாகவும் சமுக சிந்தனை மிக்க பொறுப்புள்ளவர்களாக மாற்றும் விதமாக பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பயிற்சி அளிப்பது வழக்கம். மேலும் இந்த அமைப்பில் உள்ளவர்களை மேம்பட்ட திறன் மிக்கவர்களாக மாற்றும் விதமாக கடலோர காவல் படையினர் நடத்தும் ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் சார்பாக வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர். இதனை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

செய்திகள் : கோட்டைசாமி/ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *