சிவகங்கை புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பிறந்தநாள் திருவிழாவை முன்னிட்டு, இறவியமங்கலம் திருவேகம்பத்தூரில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை, தேர்பவனி, இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், இயற்கை வளம் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து, மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்கு உணவு மற்றும் புத்தாடைகளை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை அருண்மொழி அற்புதம் குடும்பத்தினர்,துரை கருணாநிதி மற்றும் முன்னாள் ராணுவ வீரர் செபஸ்தியார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாக்குழுவினர், அரண்மனை பேக்கரி ஏ.கே. பிரபு, ஜீசஸ் மகால் தாஸ் (சருகணி), அருட்தந்தை ஆனந்தன் (இயக்குநர், இயேசுவனம்), இளங்குடி சங்கர், முன்னாள் ராணுவ வீரர் ரூபன் ராஜா (திருவேகம்பத்தூர்), சுரேஷ் மற்றும் நண்பர்கள் (இறவியமங்கலம்), ஏந்தல் கண்ணன் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

செய்திகள் ; ஆனந்த் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed