மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 71 வது பிறந்தநாள் முன்னிட்டு, தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கை வலியுறுத்தி அறவழி உண்ணாநிலை கூடுகையை தோழர் வீ. சுந்தர் ஒருங்கிணைப்பில், ஐயா பழ நெடுமாறன் அவர்கள் காலை துவக்கி வைக்க, மாலை தோழர் டி.எஸ்.ஆர. சுபாஷ் மற்றும் தோழர் கீதா அம்மா ஆகிய நிறைவு செய்து வைத்தனர் !

ஐயா பழ. நெடுமாறன் அவர்கள், உலகத் தமிழர்கள் பேரமைப்பின் தலைவர், மதுஒழிப்பு போராளி சசிபெருமாள் 71- வது பிறந்தநாளில், காந்தியவாதி சசிபெருமாள் ஆதரவு மதுஒழிப்பு போராளிகள்
வீ. சுந்தர் ஒருங்கிணைப்பில் 20-2-2026 அன்று சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் நடைப்பெற்ற அறவழி உண்ணாநிலை போராட்டத்தை துவக்கி வைத்து.. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி உரையாற்றினார்.

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் அருள், கொளத்தூர் ரவி ( தலைவர், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு) சேம. நாராயணன் ( தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் அமைப்பு தலைவர் ) தமிழ் தேசியாளர் புலவர் இரத்தினவேல், தோழர் முத்தமிழ் மணி ( தலைவர் தமிழர் தேசிய முன்னணி ) சிவஞான சமந்தம் ( காந்திய சமதர்ம இயக்கம் தலைவர் ) எம். எல். இரவி ( தலைவர், தேசிய மக்கள் சக்தி கட்சி ) பெண்ணுரிமை இயக்கம் தலைவர் லீலாவதி அம்மா மற்றும் கமலா அம்மா, இலாரன்சு ( தமிழர் தேசிய முன்னணி கட்சி சென்னை மாவட்ட தலைவர் ) தோழர் எ. எஸ் குமார் ( அகில இந்திய தொழிற் சங்கம் கவுன்சில்)

தோழர் பாலகிருஷ்ணன் ( ஐக்கிய விவாசாயிகள் முன்னணி) அருணபாரதி ( து. தலைவர், தமிழ் தேசிய பேரியிக்கம்) மேரி லில்லி ( தலைவர்,பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக்கான கூட்டியக்கம் ) தோழர் சிவக்குமார் இயற்கை விவசாயம், கார்த்திக் கண்ணன் ( பொதுச்செயலாளர், மக்களுக்குக்கான மக்கள் இயக்கம் ) மதுபோதை ஒழிப்பு செயற்பாட்டளார்கள் விசிறி சுவாமி முருகன், தனசேகர், மருதூர் பெரியசாமி, வாழ்க வளமுடன் இரவிச்சந்திரன், செல்லப்பாண்டியன், நெற்றிக்கண் கிருஷ்ணமூர்த்தி, வைரவேல் எழுத்தாளர் உமா சுப்பரமணியன், உயர்நீதி மன்றம் வழக்கறிஞர்கள் சிதம்பரம், வர்ஷா, சுபாஷ்,(பலர் பங்கேற்று மதுவிலக்கை வலியுறுத்தினார்கள்.

மாலை, தோழர் கீதா அம்மா ( அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தேசிய கூட்டமைப்பு தலைவர் மற்றும் தோழர் டி. ஆர். எஸ். சுபாஷ் ( தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ) தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கை வலியுறுத்தி பழரசம் வழங்கி உண்ணாநிலை போராட்டத்தை நிறைவு செய்தார்கள்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed