நாடு முழுவதும் முன்னாள் பாரத பிரதமரும் அமரர் ஜவகர்லால் நேருவின் பிறந்த தின விழாவை தமிழக அரசு குழந்தைகள் தின விழாவாக கொண்டாப்பட்டடுகிறது இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளான I,370 பள்ளிகளில் குழந்தைகள் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதன் பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தின விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட ஊராட்சிக்கு உறுப்பினரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான பிசி சேகர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தநேருவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட கேக் மற்றும் வாழ்த்து அட்டையை பி.சி சேகர் வழங்கி பள்ளி வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளையும் நடவு செய்து ஜவகர்லால் நேரு குறித்து பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த விழாவில் பட்டதாரி ஆசிரியர்கானான திருமதி அமலா ஆரோக்கிய மேரி, சகாயஆரோக்கியராஜ், சதீஷ் , முனிராஜ், சிவகுமார், தொழில் கல்வி ஆசிரியர் சுபாஷினி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹேமலதா உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி. இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed