திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். வேலு தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் சுமார் 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கர்ப்பிணிப் பெண்களின் நலன் மற்றும் மகிழ்ச்சியை முன்னிறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குத் தேவையான ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தன. வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படி வளையல்கள் அணிவிக்கப்பட்டு, தாய்மைப் பேறை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வகையில் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷ் மனோகரன்,
தன்ராம்பட்டு ஒன்றிய செயலாளர்
அருள்பாண்டியன், நகர செயலாளர்
ஆனந்தன், நகரத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் செல்வம் மற்றும்
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்திகள் : குருபரன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed