திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரட்டவாடி கிராமத்தில் மேல்பள்ளிப்பட்டு வட்டார ஆரம்ப சுகாதர நிலையம் சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இந்த சிறப்பு மருத்து முகாமில், கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பரிசோதனை உட்பட 17 பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்கள் அரட்டவாடி, தண்டா, மேல்வணக்கம்பாடி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 1,000 கணக்கான பொதுமக்கள் தங்கள் உடல்களை பரிசோதனை செய்து மருந்துகளை வாங்கி சென்றனர்.


இந்த மருத்துவ முகாமின் போது, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை மாவட்ட சுகாதார அலுவலர் பிரகாஷ் வழங்கினார். நிகழ்ச்சியில், வட்டார மருத்துவர் சிலம்பரசன் உட்பட மருத்துவர்கள் செவிலியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்தியாளர் : S.குகன் 9043125758 8838114296 எதிரொலி / 8939476777
