கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குச்சிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிகிழங்கு, நிலக்கடலை, நெல், ராகி, கம்பு, சோளம், கரும்பு, தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர்.
விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களை காட்டு பன்றிகள், யானைகள், மான் உள்ளிட்ட மயில்கள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதால் இதனால் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசு தமிழகத்தில் முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை பிடிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் அவர்களின் ஏற்பாட்டில் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்தின் மூலமாக, காட்டுபன்றிகளை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து எவ்வாறு பிடிப்பது குறித்த பயிற்சி முகாமும் நடைபெற்றது,
இதில் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமினை கோயம்புத்துரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் சிவக்குமார் கலந்துகொண்டு வனத்துறை அலுவலர்களுக்கு கூண்டுகள் வைத்து காட்டுப்பன்றிகளை எப்படி பிடிப்பது என்று பயிற்சிகளை அளித்தார்.

இந்த பயிற்சி முடித்த வனத்துறையினர் காட்டுப்பன்றிகள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் இரும்பு கூண்டுகள் அமைத்து கட்டுபன்றிகளை பிடிக்க முதல்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில் 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
