இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு.ஞானேஷ் குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டது ! மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்த EVM வாக்கு இயந்திரத்தை தடை செய்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், என்று வலியுறுத்தி பேசப்பட்டது.

சென்னை, சைதாப்பேட்டை அண்ணா ஆர்ச் அருகில், நடைபெற்ற ஆர்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ், அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் தோழர் வே. பொன்ராஜ், மூத்த பத்திரிகையாளர் தோழர் அய்யநாதன், சோஷலிஸ்ட் ஜனதா கட்சி தஞ்சை இளஞ்சிங்கம் உட்பட பலர் கண்டனக்குரல் எழுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஸ்டெல்லா மேரி மற்றும் கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், ஐயா எம். டி. ராமலிங்கம், கழுகு கே. ராஜேந்திரன், அ. லட்சுமணன், உமா மகேஸ்வரராவ், அருண்குமார், சீத்தாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : லெனின் லோகேஷ் /எதிரொலி . இன் / 8939476777

