தமிழ்நாட்டில் காவல்துறைக்கு என சங்கம் இல்லாததற்கு காரணம் காவல்துறை தான்-காவல்துறைக்கு சங்கம் வேண்டும், நலவாரியம் வேண்டும், சில்வர் பட்டனை கூட முதல்வர் மாற்றவில்லை என்றால் எப்படி? நாளை மதுரை வரும் முதல்வரை சந்தித்து ‌கோரிக்கை வைத்து மனு கொடுக்க உள்ளோம் காவலர்கள் குடும்ப நல அறக்கட்டளை யினர் பேட்டி :

பட்டலியனில் (காவலர் பயிற்சி பள்ளி) உள்ள காவலர்கள் 16 ஆயிரம் பேருக்குகாவல் நிலைய பணி வழங்கினால் காவல்துறையினர் பற்றாக்குறை ஏற்படாது,

காவலர்களுக்கு 8 மணி நேர பணி உத்திரவாதம் :

காவலர்களுக்கு அன்று ஒரு முறை சுற்றுலா செல்ல விடுமுறை உள்ளிட்ட 12 தீர்ப்பானங்கள் காவலர் நல அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது காவலர்கள் குடும்ப நல அறக்கட்டளை சார்பாக தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனைக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற மற்றும் பணியாற்றி வரும் காவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

காவலர்கள் குடும்ப நல அறக்கட்டளை தலைவர் சத்யபிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது:

காவலர்களுக்கு எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை வேண்டும், பி எஸ் ஓ சட்டப்படி விடுமுறை அறிவித்தார்கள் ஆனால் காவல்துறையின்களுக்கு எங்களுக்கு சட்டப்படி விடுப்பு தர மறுக்கிறார்கள். மானிய கோரிக்கையில் 25 ஆயிரம் சம்பள உயர்வு அறிவித்திருந்தார்கள்.

காவலர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். 16,000 பட்டாலியன் காவலர்கள் இருக்கின்றனர் அவர்களை களைத்து காவல் நிலையத்திற்கு பணிக்கு அமர்த்த வேண்டும். அதிகமாக லாக்கப் டெத் நடக்கிறது என்று காவல் துறையினரை குற்றம் சாட்டுகின்றோம். காவலர்கள் குற்றவாளிகளை கைது செய்யும் போது ஒரு அரசு வழக்கறிஞர் உடன் இருக்க வேண்டும்.

காவலர்கள் குடும்பத்தினரிடம் இருக்க நேரம் ஒதுக்க நேரம் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர்களுக்கு கழிப்பறை, சாப்பாடு வசதிகள் எதுவும் இல்லை பெண் காவலர்களுக்கு பாதுகாப்பையும், வசதியையும் முதல்வர் செய்து தர வேண்டும். தமிழ்நாட்டில் காவல் துறைக்கு சங்கம் இல்லாததற்கு காரணம் காவல்துறை தான் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. தமிழ்நாடு காவல்துறை சங்கம் வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைப்போம். காவலர்களுக்கான நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்.

நாளைக்கு மதுரைக்கு வரும் முதல்வரை பார்க்க இருக்கிறோம் மனு கொடுக்க இருக்கிறோம். ஒரு சில்வர் பட்டனை மாற்றுங்கள் என்று சொல்கிறோம் அதுகூட செய்யவில்லை என்றால் ரொம்ப கஷ்டம். பணியில் இருக்கும் காவலர்கள் உயிரிழக்கும் போது அவரது குடும்பம் கஷ்டத்தில் உள்ளனர். சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவத்தில் பத்து காவலர்கள் குடும்பங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

காவலர்கள் செய்தது தப்புதான் ஆனால் அவர்கள் குடும்பம் பாதிக்கப்படுகிறார்களே காவலர்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என காவலர் நல அறக்கட்டளை தலைவர் சத்திய பிரியா கூறினார் .

செய்திகள் : காளமேகம் / எதிரொலி. இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed