விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சித்ரா மருத்துவமனை இதய சிகிச்சை சேவைகளை தொடங்கிய 18 மாதங்களில் ஆயிரம் இதயங்களுக்கு மேல் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது விருதுநகர் மாவட்டத்திலேயே முதன்முறையாக லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முறையை ராம்கோ குழும தலைவர் பி. ஆர். வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார் மருத்துவமனை தலைவர் டாக்டர் ஏ.பி. கோபால முருகன் வரவேற்றுப் பேசினார்.
மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. ஞானகுரு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை குறித்து விளக்கி கூறினார். விருதுநகர் மாவட்டத்திலேயே முதன்முறையாக இந்த ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை சித்ரா மருத்துவ மனையில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜபாளையத்தில் உள்ள சித்ரா மருத்துவமனைக்கு மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கேரளாவில் இருந்து நோயாளிகள் வருகை தருகின்றனர். இங்கு உள்ள லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை மிகவும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது. முடிவில் மருத்துவ இயக்குனர் டாக்டர் என் சுரேஷ் பாபு நன்றி கூறினார்.
செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777
