கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.09.2026) பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னதாக உதவி ஆசிரியர் பூ.இராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் பள்ளி மேலாண்மை குழுவின் அவசியம், அதன் செயல்பாடுகள் மற்றும் தற்போது மறுகட்டமைப்பு செய்வதன் நோக்கம் ஆகியவை குறித்து விரிவாக விளக்கினார். தொடர்ந்து பெற்றோர்களின் பல்வேறு விதமான கருத்துகளுக்குப் பின்னர் வரும் 2026 – 2028 ஆண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட்டனர். புதிய உறுப்பினர்களுக்கு, சிறப்புப் பார்வையாளராக கலந்துக்கொண்ட வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் வே. சண்முகம் முறைப்படி பதவியேற்பு செய்து வைத்தார்.

பின்னர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் மு. பயாஸ்பாஷா, ரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் உதவி ஆசிரியர் கோ. ஆனந்தன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed