மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை ஆற்று பகுதியில் இருந்து கிணறு மூலம் மதுரை திருமங்கலம் கருமாத்தூர் அவனியாபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட கிணறுகள் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது
இதே போன்று சோழவந்தான் தச்சம்பத்து ஆகிய பகுதிகளில் இருந்தும் வைகை ஆற்றில் கிணறுகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது இந்த குடிநீரானது ராட்சத குழாய் மூலம் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக ராட்சதக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே குடிநீர் வீணாகி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இன்று மாலை சோழவந்தான் அருகே மேலக்கால் நிலையூர் கால்வாய் பகுதியில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வானளாவிய உயரத்துக்கு பீச்சி அடித்து வீணாகி சென்று வருகிறது.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாகி சாலைகளிலும் வயல்களிலும் அருகில் உள்ள நிலையூர் கால்வாய் பகுதிகளிலும் குடிநீர் வீணாகி செல்கிறது ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு திருவேடகம் அருகே மதுரை மாநகராட்சிக்கு சென்ற ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் ஆறாக ஓடிய நிலையில் தற்போது திருமங்கலம் நகராட்சிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இங்கும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி செல்கிறது
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகம் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் குழாயானது மிகவும் பழைய நிலையில் இருப்பதாகவும் பராமரிப்பு இல்லாத நிலையில் இது போன்று உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்வதாகவும் ஆங்காங்கே பொதுமக்கள் கூறுகின்றனர். இது போன்ற குடிநீர் குழாய்களை மாற்றி புதிய தொழில்நுட்பத்துடன் குடிநீர் குழாய்களை அமைக்க வேண்டும் குடிநீர் வீணாகி செல்வது தடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட கிணறுகள் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுவதால் வறட்சி காரணமாக தண்ணீர் இல்லாத நிலையில் இன்னும் சில தினங்களில் வைகை ஆரும் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் கீழே செல்லக்கூடிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக வீணாகி செல்லும் குடிநீரை தடுத்து பாதுகாப்பான முறையில் குடிநீர் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
