வாடிப்பட்டி அருகே, பூச்சம்பட்டி ஊராட்சி சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த 100 நாள் வேலை பணியாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் அவர்களுக்கு சரியான பதில் அளிக்காததால், திடீரென சோழவந்தான் திருமங்கலம் மெயின் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ், சோழவந்தான் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.

அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் கூறுகையில் ;
வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பார்த்த நிலையில 100 நாள் வேலை பணிகளை ஒரே ஊராட்சியில் உள்ள பூச்சம்பட்டி சொக்கலிங்கபுரம் கிராமத்திற்கு தனி தனியாக கொடுக்க முடியாது என்று கூறி இரண்டு கிராமங்களையும் ஒரே பகுதியாக சேர்த்து 100 நாள் பணி வழங்கியதாகவும், ஆனால் 100 நாள் வேலை பார்த்த பின்பு பூச்சம்பட்டி கிராம பொதுமக்களுக்கு மட்டும் 100 நாள் சம்பளத்தை வரவு வைத்ததாகவும் ஊராட்சியின் மற்றொரு பகுதியான சொக்கலிங்கபுரம் பொதுமக்களுக்கு 100 நாள் வேலை சம்பளத்தை வரவு வைக்கவில்லை என கூறுகின்றனர்.

மேலும் அதற்குப் பிறகு தற்போது பார்த்து வரும் பொது மக்களுக்கு மாதம் தோறும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மூன்று மாதத்தில் பார்த்தவர்களுக்கு மட்டும் தற்போது வரை வரவு வைக்கப்படவில்லை என கூறுகின்றனர். மேலும், ஏற்கனவே ஊராட்சி செயலாளராக இருந்தவர் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்ற நிலையில், தற்போது புதிய ஊராட்சி செயலாளர் பொறுப்பேற்று உள்ளார் இந்த நிலையில் தற்போது வரை பணம் வழங்கவில்லை எனக் கூறினார்.
சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவேடகம் கிராமத்தில் உள்ள வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனளிக்காத நிலையில் திடீரென சோழவந்தான் திருமங்கலம் செல்லும் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் மற்றும் சோழவந்தான் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அரை மணி நேரம் கழித்து சாலை மறியலை கைவிட்டு விட்டு, வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

மேலும், பணம் வரவு வைக்கவில்லை என்றால் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரித்து யூனியன் அலுவலகம் முன்பு அமர்ந்து தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள் ; காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
