ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் மூலம் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து , கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தில் கையொப்பமிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் , மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மாரி , தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் முருகவேல், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் செய்தியாளர் : மாமுஜெயக்குமார் / எதிரொலி / 8939476777
