ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகில் உள்ள கடம்பனேந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இக் கண்காட்சி நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகள் இடம் பெற்றது. இதில் நுரையீரல் மற்றும், இதயம் செயல்படும் முறை, மேலும் ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை வகைப்படுத்தியும், உப்பு நீரை குடிநீராக மாற்றும் முறை உள்ளிட்ட அறிவியல் செய்முறைகள் இடம்பெற்று பார்வையாளர்ளை வியக்க வைத்தது.

இந்நிகழ்வுக்கு, பள்ளி தலைமையாசிரியர் பிரமிளா தலைமை தாங்கினார். ஆசிரியர் சகாய ஹில்டா முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி நாச்சார் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரதீபா மற்றும் பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டதுடன் சிறுவயதிலேயே அறிவியல் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் காட்சி படுத்திய மாணவ, மாணவிகளையும் அவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளித்த ஆசிரிய பெருமக்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

ராமநாதபுரம் செய்தியாளர் : மாமு. ஜெயக்குமார் / எதிரொலி / 8939476777
