ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் 11.09.2026-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டும், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தவும், அஞ்சலி செலுத்த வருவோரின் பாதுகாப்பு , நலன் கருதியும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் செப்டம்பர் 11-ந் தேதி மாவட்ட நிர்வாகத்தின் கீழ்க்கண்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
  1. அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் , பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வர வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணை பிரிவு 163(1) பிஎன்எஸ் எஸ் உத்தரவின்படி 11.09.2026 ந் தேதி, டி – போர்டு வாகனங்கள் , திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை.
  2. மேலும், இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் , சைக்கிள் போன்ற சரக்கு வாகனங்களில் வர அனுமதி இல்லை.
    02. மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக, சுமார் 8000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சில முக்கிய, கூர்உணர்ச்சிமிக்க இடங்களாக கண்டறியப்பட்ட 938 இடங்களில் மேற்படி நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  3. மேலும், விதி மீறல்களைத் தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் 38 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் வாகனங்களை சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  4. சாலைகளில் வாகன போக்குவரத்தை நெறிப்படுத்தவும், மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் ரோந்து பணிகளை மேற்கொண்டு பாதுகாப்பு உறுதி செய்யவும் 44 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளன.
  5. மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் ரோந்து பணிகள் மேற்கொண்டு பாதுகாப்பு வழங்கும் வகையில் 67 இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் அமைக்கப்பட்டு ஏறபாடு செய்யப்பட்டுள்ளன.
    6.பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 700 சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்துப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    மேலும், செப்டம்பர்-11-ம் தேதி ஒரு நாள் மட்டும் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது :
    ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி செல்லும் பேருந்துகள், கார்கள் , கனரக வாகனங்கள் (லாரி, வேன், டிராக்டர் , சரக்கு வாகனங்கள்) ராமநாதபுரத்திலிருந்து, ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் இசிஆர் சாலை சந்திப்பு, பேராவூர் இசிஆர் சாலை சந்திப்பு, தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், சி.கே.மங்கலம், சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை செல்ல வேண்டும்.
    ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி செல்லும் பேருந்துகள், கார்கள் , கனரக வாகனங்கள் (லாரி, வேன், டிராக்டர் , சரக்கு வாகனங்கள்) ராமநாதபுரத்திலிருந்து, ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் இசிஆர் சாலை சந்திப்பு, பேராவூர் இசிஆர் சாலை சந்திப்பு, தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், சி.கே.மங்கலம், சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை செல்ல வேண்டும்.
  6. மதுரையிலிருந்து மானாமதுரை பரமக்குடி வழியாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் வரக்கூடிய அரசு பேருந்துகள், கார்கள் , சரக்கு வாகனங்கள் மதுரையிலிருந்து பாண்டிகோயில் சந்திப்பு, பூவந்தி வழியாக சிவகங்கை காளையார்கோவில் சருகனி -திருவாடானை ஆர்.எஸ்.மங்களம் வழியாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.
    தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் , கமுதியிலிருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் (லாரி, வேன், டிராக்டர் , சரக்கு வாகனங்கள்) சாயல்குடி இசிஆர். சாலை, சிக்கல், கீழக்கரை வழியாக செல்ல வேண்டும்.
    முதுகுளத்தூரிலிருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் (லாரி, வேன், டிராக்டர் , சரக்கு வாகனங்கள்) இதர வாகனங்கள் சாயல்குடி இசிஆர் – சாலை, சிக்கல், கீழக்கரை வழியாக செல்ல வேண்டும்.
  7. இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed