மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பள்ளக்கா புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஏராளமான பெண்கள் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வரும் நிலையில் கடந்த இரு மாதங்களாகவே குடிநீரின்றி அவதியுறும் இக்கிராம மக்களுக்கு, தற்காலிகமாக லாரியில் குடிநீர் அனுப்புவதாக அலுவலர்கள் தெரிவித்ததால், வாக்குவாதம் முற்றியதால் அங்கு பரபரப்பு முற்றியது.

நிரந்தரமாக எங்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லை என்றால் இங்கிருந்து செல்ல முடியாது என கோஷமிட்டதால் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இது தொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் முறையீட்டும் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும் ,அதிகாரிகளிடம் கிராமப் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ,உயர் அதிகாரிகள் வரும் வரை பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என தெரிவித்ததால், அலுவலக வாயில் முன்பே காலிக் குடங்களுடன் பெண்கள் அமர்ந்தனர்.

பேட்டி : 1. காமாட்சி
2. சந்தானம், கப்பலூர்

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed