சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து திருப்பரங்குன்றம் பகுதியில் திமுகவினர் சாலை மறியல் செய்தனர். எதிர்கட்சி தலைவர் உதயநிதியை விடுதலை செய் என கோசங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி தலைமையில் ஒரு பெண் உட்பட 30 பேர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய் வழக்கு போடாதே என கோஷங்கள் எழுப்பியும் விடுதலை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் உதவி காவல் ஆணையாளர் சசி பிரியா தலைமையில் காவல்துறையினர் அவர்களை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

செய்திகள் / காளமேகம் எதிரொலி ; 8939476777
