கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் கைதானதை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பர்கூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, திமுக மாநில பொது குழு உறுப்பினர் ஏ.சி , நாகராஜன் தலைமையில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், காந்தி,பர்கூர் சேர்மன் சந்தோஷ் குமார்,பேரூர் கழக செயலாளர் வெங்கட்டப்பன் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு, உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பர்கூர் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed