பெண்கள் குழுவாக நடனமாடியும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டும் பள்ளி பருவத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்...

திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் உள்ள சீதாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1963 முதல் 2026 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவியும் விருதுநகர் மண்டல சரக்கு மற்றும் சேவை வரித்துறை இணை இயக்குநருமான திருமதி மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இவ்விழாவில் பள்ளிக்குழுத் தலைவர், கமலம் இராஜேந்திரன் முன்னிலையில், நிர்வாகக்குழுத்தலைவர் வெங்கடேஷ் மற்றும் பள்ளிச் செயலர் பூர்ணிமா வெங்கடேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் அனுபவங்கள் மற்றும் முன்னாள் மாணவிகளின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி செயலாளர் பூர்ணிமா வெங்கடேசன் பேசும்போது: 1963-இல் பள்ளி தொடங்கப்பட்டது அதற்குப் பிறகு
64 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முன்னாள் மாணவர்கள் சந்திப்பானது தற்போது நடைபெற்றுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்து முன்னாள் மாணவர்கள் வந்திருக்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பெண்ணுக்கு கல்வி கொடுத்தால் ஒரு சமுதாயமே முன்னேறும் அந்த நோக்கத்தில் தான் எங்கள் தாத்தாவால் இப்பள்ளி தொடங்கப்பட்டது இன்னும் நிறைய கலெக்டர், டாக்டர்களை உருவாக்க நோக்கில் பள்ளியை கொண்டு சென்று வருகிறோம். 63 ஆண்டுகளுக்குப் பின்னர் என்பதால் சோசியல் மீடியா மூலம் பழைய மாணவர்களை ஒன்று சேர்த்துள்ளோம். இன்னும் இந்த நண்பர்கள் குழுவை ஒன்றிணைத்து இன்னும் அடுத்த அடுத்த ஆண்டுகளில் மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற இந்தியா மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கும் மதுரையை சேர்ந்த வீராங்கனை கமலினி இந்த பள்ளியில் பயின்றவர் தான். கமலினி சிறுவயதில் இருந்தே மிகுந்த ஆர்வம் உடையவர், மற்ற மாணவர்களையும் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட அறிவுறுத்துகிறோம். அப்போது தான் பெண் மாணவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். நம்மளுடைய சிஎம் விஜய் பரிசுத்தொகை அறிவித்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கிரிக்கெட் வீரர் கமலினி மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள் என்றார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed