ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்

” உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது , ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை வாரியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்ததுடன், அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் எவ்வித தாமதமும் இன்றி சென்றடைய வேண்டும் எனவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு விரைந்து செய்து தர வேண்டும் எனவும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து , ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 07 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.2,50,000/- மதிப்பீட்டிலும், ஒரு பயனாளிக்கு உழவர் அட்டையும் என 08 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வழங்கினார்.
முன்னதாக , ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர் , சமூக நீதி கல்லூரி மாணவி விடுதியினை பார்வையிட்டு, விடுதியில் தங்கி பயிலும் மாணவியர்களிடம் கலந்துரையாடி, விடுதியில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, உணவின் தரம், தங்கும் அறைகள், கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும், விடுதி வளாகத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் எனவும், மாணவியர்களின் கல்வி , பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

ஆய்வுக் கூட்டத்தின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷுநிகம், ராமநாதபுரம் வட்டாட்சியர் காளீஸ்வரன் , ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் குமரன் , ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed