மாநில மரத்தின் சிறப்பைப் பாதுகாக்கவும், வறட்சி மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை எதிர்கொள்ளவும்,கிராமப்புற பொருளாதாரத்திற்கும், நிலப்பரப்பு பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழலுக்கும், மிக உகந்ததாக கருதப்படும் பனை மரங்கள் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு, நீர்நிலைகள் மற்றும் ஏரிக்கரைகள் பாதுகாப்பு, புயல் காற்றை எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவை.மின் கடத்தியாக” செயல்பட்டு, இடி-மின்னல் பாதிப்புகளில் இருந்து மனிதர்களையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்கின்றன.


அதேபோல பனை மரத்திலிருந்து பதனீர், கள்ளு (விதிமுறைகளுக்கு உட்பட்டு), நுங்கு, பனங்கற்கண்டு, பனை வெல்லம், பனைங்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பனம் மரங்களால் பல லட்சம் தொழிலாளர்கள் தேசமெங்கும் பயன் பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு, மாநில நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை (NCC), எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், NDSO, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் பிரம்மாண்டமான “ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி” இயக்கத்தை ,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்கள் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்சியில் தேவரியம்பாக்கம் கிராம ஊராட்சித் தலைவர் த. அஜய்குமார், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் எஸ். செந்தூர்பாரி நாட்டு நலப்பணித் திட்ட மாநில அலுவலர் முனைவர் பி. என். குணாநிதி கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. ராஜவேலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளைப் பலப்படுத்தவும் முன்னெடுக்கப்படும் இம்மாபெரும் பனை விதை நடும் இயக்கத்தில் பொதுமக்கள், ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பனை விதைகளை நடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

