ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி , கீழக்கரை பகுதிகளில் குடிநீர், மின்சாரம், அடிப்படை வசதிகள் , பேரிடர் முன்னேற்பாடு பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் முதுகுளத்தூர் வட்டம், செல்வநாயகபுரம் அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் , வருகைப்பதிவேடுகளை பார்வையிட்டு, மாணவர், மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து , கடலாடி , கீழக்கரை வட்டங்களுக்குட்பட்ட கன்னிராஜபுரம், மாரியூர், கல்பார், கீழமுந்தல் பகுதிகளில் உள்ள புயல் காப்பகத்தில் குடிநீர், மின்சாரம், அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  கேட்டறிந்ததுடன், மழைக்காலம் வருவதற்கு முன் பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான வசதிகள், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் , கட்டிடத்தின் பராமரிப்பு நிலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்  அறிவுறுத்தினார்.


மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed