சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு சார்பாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் செவிலியர் வேலை வாய்ப்புக்காக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையிலான 112 செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 13.09.2026 முதல் வரவேற்கப்படுகிறது.

இப்பணி முற்றிலும் தற்காலிகமானது, எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு, விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு ஆணை சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை 630562 என்ற முகவரிக்கு 25.09.2026 ற்குள் பதிவுத்தபால் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *