திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ்.எம். ஹனீப் திடீரென ஏற்பட்ட உடல் நல குறைபாடு காரணமாக இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளமை காலத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், பின்னர் வாலிபர் சங்கத்திலும் இணைந்து எஸ்.எம். ஹனீப் அவர்கள் செயல்பட்டு வந்தார். கட்சியின் வளர்ச்சிக்காகவும், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் அவர் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.
அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டதற்காக பல்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையையும் அவர் அனுபவித்துள்ளார். கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்த எஸ்.எம். ஹனீப், சோழவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சிப் பணிகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் என இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பணிகளிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மூத்த தோழர் எஸ்.எம். ஹனீப்பின் மறைவு, கட்சிக்கும் இயக்கத்திற்கும் பெரும் இழப்பு என்று பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் மக்களின் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் களத்தில் நின்று போராடிய தோழர் அணி அவர்கள், பள்ளி பருவத்திலேயே மாணவர் இயக்கத்தின் மூலம் தனது பொதுவாழ்வைத் தூங்கினார். பின்னர், தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியை விட்டு விலகி, கட்சியின் முழுநேர ஊழியராக இணைந்து எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார்.

பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் நேரடியாகச் சென்று வாலிபர் சங்கத்தை கட்டியமைப்பதில் முக்கியப் பங்காற்றியவர். மூத்த தோழர்களை ஒருங்கிணைத்து இயக்கப் பணிகளை வழிநடத்தியதுடன், இயக்கத்தின் விதிமுறைகளிலும் முடிவுகளிலும் இறுதிவரை மிகுந்த உறுதியுடன் செயல்பட்டவர்.

மறைந்த தோழர் அனீப்பின் உடலுக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். நம்பு ராஜன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பி. எஸ். பாரதிஅண்ணா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லாமின் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தார்.

மறைந்த தோழர் எஸ். எம். அனீப் அவர்களுக்கு ஹூனா பேகம் என்ற மனைவியும், ஆரிப் என்ற மகனும் உள்ளனர். அவரது உடல் பொன்னேரி என்.ஜி.ஓ நகர், அக்பர் தெருவில் உள்ள அனீப் இல்லத்திலிருந்து, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிப் பணிக்காக, நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது.

முன்னதாக, தோழர் அனீப் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மூத்த தோழர் அ.சவுந்தரராசன், மாநில குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மூத்த தோழர் ப.சுந்தரராசன், சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் அ.பாக்கியம், வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமன், பொன்னேரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.

கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் பெ.சண்முகம், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் நேரு, மாநில குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் ஆகியோர் தொலைபேசி மூலம் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தோழர் எஸ்.எம்.அனீப் இல்லத்திலிருந்து அவரின் உடலை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அம்பேத்கர் சிலை அருகில் வரை செம்படை பேரணி நடைபெற்றது. பின்னர் அவசர ஊர்தி மூலம் தோழர் அனீப் உடல் எடுத்துச் சென்று திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையிலும் ஏராளமான தோழர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொன்னேரி வட்டாட்சியர் ஜெவகர்பிரபு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தோழர் எஸ்.எம்.அனீப் உடலை நேற்று திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாணவர்களின் மருத்துவ ஆராய்ச்சிக்காக உடலை ஒப்படைத்தனர். அப்போது மருத்துவமனை ஆர்.எம்.ஒ மற்றும் மருத்துவ குழுவினர் உடலை பெற்றுக் கொண்டனர்.

செய்திகள் ; லெனின் லோகேஷ் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed