கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் உற்சாகத்துடன்
கலந்துகொண்டனர்.
இந்த சிலம்பம் போட்டியில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி,அணை அருகே உள்ள துவாரகா மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 30 பள்ளி மாணவ, மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஒழுக்கம் மற்றும் மாணவர்களிடையே தன்னம்பிக்கையுடன் கூடிய வலிமை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பள்ளி மற்றும் பாரம்பரியக் கலைகளின் மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதில் துவாரகா பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளையும் பதக்கங்களையும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் கோகுல் மாணவர்களின் திறமையைப் பெருமையுடன் பாராட்டியதோடு, தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று மேலும் பல வெற்றிகளைப்பெற வேண்டும் என வாழ்த்தினார். அப்போது சிலம்ப பயிற்சியாளர் குரு ராகவேந்திரன் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
