விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அயன் கொல்லங்கொண்டான் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகின்றனர். அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வசதியை மேம்படுத்த கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் ஜல்ஜீவன் மிஸன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்காக தெருக்கள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

ஆனால், இத்திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட தெருக்கள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமான, மண் சாலையாகவே இருந்து வருகிறது. மேலும் தெருக்கள் தோண்டப்பட்டபோது. கழிவுநீர் கால்வாய்களில் மண் மேவி கழிவு நீர் அங்காங்கே தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு விளைவிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது கோடை காலம் என்பதால் பாதிப்பு குறைவு, ஆனால் மழைக்காலங்களில் தெருக்கள் சேறும் சகதியுமாக மாறி, நடந்து செல்லமுடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் தோண்டப்பட்ட தெருக்கள் அனைத்தும் புதிய சிமெண்ட் சாலைகளாக மாற்றித்தரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; ராதாகிருஷ்ணன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *