கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த ஒரு ஆண்டும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு போதிய மழையும் இல்லாததால் ஏரி குளங்களில் தண்ணீர் இன்றி வரண்டு போனதால், ஏரி, குளம் கிணறுகளை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் காய்ந்து கருகி வருவதோடு குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள சூரன்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற
ஸ்ரீ சொர்ண ஹர்சன பைரவர் திருக்கோவில் அமைந்துள்ள
அரச மரத்திற்கு நல்ல மழை வேண்டி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையின் போது சூரன்குட்டை கிராம மக்கள்
ஒன்றிணைந்து அரச மரத்தின் அடியில் பச்சை தென்னம்ஓலையில் சிறிய அளவில் குடிசை அமைத்து அதில் மழை இன்றி வறண்டு கிடக்கும் ஏரி , குளம், கிணறு போன்ற நீர்நிலைகள் தண்ணீரால் நிரம்பி விவசாயம் செழித்திட வேண்டி பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சொர்ண கர்ஷன பைரவர் சுவாமிக்கும் பூஜைகள் மற்றும் குலதெய்வ பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்களுடன் பரணி தீபமும் ஏற்றி வைக்கப்பட்டது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புஸ்ப பல்லாக்கில் ஸ்ரீ சொர்ண பைரவர், ஸ்ரீ காலபைரவர் எழுந்தருளிய நிலையில் கோவிலை சுற்றி திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த விழாவில் சூரன்குட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு மழையின்றி கருகும் பயிர்களை காப்பாற்ற மழை பெய்ய வேண்டி வழிபட்டனர்.

மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள் பி.சி.சேகர், சீனிவாசன், கண்ணன், பைரப்பன் , முருகன், கோவில் அறக்கட்டளையின் தலைவர் திருமதி ரமணிசேகர் மற்றும் ஆறுமுகம், சாந்தகுமார், ரமேஷ், வலச கவுண்டனூர் பூபதி, கோவில் நிர்வாகி கோவி கிருஷ்ணன், வடிவேல், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8949476777
