நிகழ்ச்சியில் ஆசிரியர் மு.ஸ்ரீரங்கன் வரவேற்புரை ஆற்றினார், தேன் தமிழ் நாட்டியாலயா பள்ளிகள் நிறுவனர் ஸ்ரீமதி டாக்டர் குரு மதுமொழி ஆனந்த் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மேனாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்த 25 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக முதுநிலை இயற்பியல் ஆசிரியர் கி. விஜயகுமார், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திருமதி உஷா அன்பு, காவேரிப்பட்டணம் ராஜராஜேஸ்வரி பள்ளி முதல்வர் திரு.க. அருள், மில்லட் இரா.முருகன், ஸ்ரீநிவாச
கல்வி நிறுவனர் மதிப்புறு முனைவர் ஜெ.பாலாஜி,
கா.வே.சிங்காரவேலன், ஜி .கே சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆசிரியர்களை வாழ்த்தினார்கள். விழா ஏற்பாடுகளை நடன ஆசிரியர் மாஹிரா செய்தனர்.

விழா முடிவில் பட்டதாரி ஆசிரியர் மதிப்புறு முனைவர் கி.சித்ரா நன்றியுரை கூறினார். நாட்டுப்பண் இசைத்து இனிதே விழா நிறைவடைந்தது.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
