காஞ்சிபுரம் மாவட்டம், வட்டம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பனப்பாக்கம் கிராமத்தில், மறைந்த தன் தந்தைக்கு மணிமண்டபம் கட்டி, குடும்பத்தினருடன் மனமுருக 8-ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இப்பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவருமான Dr. H.ரவி அவர்கள், தனது மறைந்த தந்தை தெய்வத்திரு. B.ஹரிபாபு ராஜா அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவையொட்டி, அவருக்கு பிரம்மாண்டமாக மணிமண்டபம் அமைத்துள்ளார்.
தொடர்ந்து, தனது தாயார் H.ஜெயலட்சுமி அம்மாள், மகன்கள், மருமகள்கள், பேரன்கள் மற்றும் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் இணைந்து மலரஞ்சலி செலுத்தி மனமுருக அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வின் போது பனப்பாக்கம் Dr. H.ரவி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது ”வாழும் காலத்தில் பெற்றோர்களை நன்றாக அரவணைத்து, அவர்கள் மீது பாசத்தைப் பொழிய வேண்டும். அவர்கள் மறைந்த பின்னரும் அஞ்சலி செலுத்தி, அவர்களின் நினைவுகளோடு வாழ்வதுடன், மற்றவர்களுக்கு இயன்ற சேவைகளைச் செய்து நல்வாழ்க்கை வாழ்வதுதான் ஒரு மனிதனின் சிறந்த வாழ்க்கையாகும்.” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777
