திருமங்கலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் மூன்று லட்சம் பெறுமானமுள்ள மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக பாக்ட் உர நிறுவனம் அர்ப்பணிப்பு. மேலும், இந்நிறுவனம் தமிழகமெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ரூபாய் 50 லட்சம் பெறுமானமுள்ள மருத்துவ உபகரணங்களை வழங்க ஏற்பாடுகள் தீவிரம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாக்ட் உர நிறுவனம் சார்பில், ரூபாய் 3 லட்சம் மதிப்புடைய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 10 வீல் சேர்கள் உள்ளிட்டவை அர்ப்பணிக்கப்பட்டன.மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்த பாக்ட் உர நிறுவன அதிகாரிகளுக்கு, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்திகள் : காளமேகம். I எதிரொலி / 8939476777

