ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உபரி நீர் , மழைநீரை பனையூர் முதல் சித்தார்கோட்டை வரையிலான கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ள நீர்வரத்துக் கால்வாய்க,ளில், நீர் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யும் வகையில் கால்வாய் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் , ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்து, மழைநீர் , பிற கன்மாய்களிலிருந்து வரும் உபரி நீர் தடையின்றி சித்தார்கோட்டை வரையிலான கண்மாய்களுக்கு சென்றடையும் வகையில், நீர்வழித்தடங்கள் , கால்வாய்களை சீரமைத்து, உள்ளூர் மழைநீர் , பிற கண்மாய்களிலிருந்து வரும் உபரி நீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து , மாவட்ட ஆட்சித்தலைவர் பட்டா நிலங்களைத் தவிர்த்து, சீரமைக்க வேண்டிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அளவீடு செய்து சரிபார்த்த பின்னர், கால்வாய்களின் நீளம் , அகலம் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் மதிப்பீடு தயாரிக்க அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

பின்னர்,பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லம் ஊராட்சி, நெடுங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், மண்டல சமநிலைத் தேக்கத் தொட்டி மூலம் இப்பகுதியிலுள்ள கிராம ஊராட்சிகளின் மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வல்லம் ஊராட்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டியை பார்வையிட்டதுடன், வல்லம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொண்ட குடிநீர் மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

முன்னதாக , ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலை) நடைபெற்று வரும் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டார்.
ஆய்வின் போது , உதவி செயற்பொறியாளர் சந்திரமோகன் , உதவி பொறியாளர்கள் கலாராணி , உமா , நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கா.பாலதண்டாயுதம் , உதவி பொறியாளர் பிரதீப் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபால் , கண்ணன், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *