திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட, ஆரணி பேரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 ஆலோசனை கூட்டம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி வளர்ச்சிப் பணிகளுக்கு உறுப்பினர்கள் நிர்வாகிகள் எவ்வாறு பணி செய்வது உறுப்பினர்களை இணைப்பது என்பது குறித்தும் காங்கிரஸ் கமிட்டியின் பாரம்பரியம் கொள்கைகள் மற்றும் இந்திய அளவிலான செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி அவர்களின் அளவற்ற பணிகள் குறித்தும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டி செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆரணி பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆரணி ப. விக்டர் ராஜ்குமார் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில்
மாவட்ட தலைவர், வழக்கறிஞர் சசிகுமார், மேலிட பார்வையாளர்
சரவணன், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகி திவாகர், மணவாளன், கலில் ரகுமான்,மாவட்ட பொது செயலாளர் சந்துரு, வழக்கறிஞர் யோகிராம்,நேருஜி,மதன்,ராஜேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed