இவ்விழாவில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்ற உறுப்பினார்கள் உள்ளிட்ட 165 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்பு ;
கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஸ்டமி மற்றும் 816 ஆம் ஆண்டு பாலபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு திருக்கோவிலில் யாக பூஜைகளுடன் துவங்கிய இந்த பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகபூஜைகள் மற்றும் காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சூரன்குட்டை, இராயக்கோட்டை, ஆலப்பட்டி, காத்தாடி குப்பம், மல்லி நாயனப்பள்ளி, வெண்ணம்பள்ளி உள்ளிட்ட 165 கிராமங்களில் இருந்து 1008 பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலிட்டம் கும்மியாட்டம்,
சேவாயாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்சியுடன் கிருஷ்ணகிரி தர்மராஜா திருக்கோவிலில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலமானது பழையப் பேட்டை, காந்திரோடு , நேதாஜி ரோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக ஏரிக்கரையேரம் அமைந்துள்ள காலபைரவர் திருக்கோவில் வந்தடைந்தது.

பின்னர் திருக்கோவில் கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீகால பைரவர் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. இந்த பாலபிஷேக விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேவுநாத் , முன்னாள் சபாநாயகர் டாக்டர் தம்பிதுரை, சட்ட மன்ற உறுப்பினர் முகுந்தன், காங்கிரஸ் கிழக்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் முருகன், சி.வி.ராஜேந்திரன், அசோக்குமார், நகர் மன்ற தலைவர் திருமதி சாவித்திரி கடலரசு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும், இவ்விழாவினைத் தொடர்ந்து ஸ்ரீ காலபைரவர் மற்றும் ஸ்ரீ சீத்த பைரவர் சுவாமிகளின் அலங்கரிக்கப்பட்ட புஸ்பவ பல்லாக்கில் எழுந்தருளிய நிலையில் திருவீதி உலாவும் நடைப்பெற்றது. பாலபிஷேக விழாவினை முன்னிட்டு சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ சீத்தபைரவர் ஆகிய சுவாமிகளை ஏராளமான மக்கள் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் வேலாயுதம், கௌரவ தலைவர் பி. சி. சேகர், மற்றும் பைரேஷ், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட 165 கிராமங்களை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் சிறப்பாக
செய்து இருந்தனர்.
செய்திகள் / மாருதி மனோ / எதிரொலி / 8939476777
