கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், கருக்கன்சாவடியில் அமைந்துள்ள ரிச்மேன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மா.பிரபு தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பள்ளி நிறுவனர் கோ கு.மாதேசன் அவர்கள் மாணவ – மாணவிகளுக்கு கிருஷ்ண ஜெயந்தி பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் மாணவ மாணவிகளுக்கு இடையே கலந்துரையாடினார்.

தொடர்ந்து மாணவ மாணவிகள் நடன நிகழ்ச்சியை நடைபபெற்ற்து. தொடர்ந்து கிருஷ்ணரின் பிறப்பு என்ற நாடகத்தை ஆசிரியர் சத்யா, அருணா, லோகேஷ் பிரியா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மழலையர் குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கிருஷ்ணன் ராதை வேடமிட்டு வந்திருந்தனர், விழாவில் சிறப்பாக நடித்த மாணவ மாணவிகளுக்கு மற்றும் கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்த மாணவ – மாணவிகளுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.
இவ்விழா ஏற்பாடுகளை ஆசிரியை ஆசிரியர்கள் செய்தனர்.

விழா முடிவில் பள்ளி துணை முதல்வர் சா.முருகேசன் நன்றி உரை கூறினார்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed