கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் பேங்க் ஆப் இந்தியாவின் 121 வது ஆண்டு விழா வங்கியில் கொண்டாடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி 120 ஆண்டுகளை கடந்து 121 வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை வங்கி ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். பின்னர் வங்கி மேலாளர் வாடிக்கையாளர்களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.

இதில் வங்கி மேலாளர் அஜித் பாஷா துணை மேலாளர் ரூபினி மற்றும் காசாளர் கணேஷ் வங்கி மற்றும் கடன் வழங்கும் அலுவலர் கோபிநாத் வங்கி உதவியாளர் கோடீஸ்வரன் வங்கியின் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரும் கலந்துகொன்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

வங்கி மேலாளர் பேசுகையில் ;
பேங்க் ஆப் இந்தியா வங்கி, 120 ஆண்டுகளை கடந்து 121 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வங்கியின் சேவை சிறப்பானதாக உள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தேவைகளை வங்கியின் சார்பாக தாமதப்படுத்தாமல் உடனடியாக செய்து தருவதுதான் இந்த வங்கியின் வளர்ச்சியின் காரணம் எனவும் பல்வேறு வளர்ச்சி பற்றி கூறினார். மேலும், வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வங்கியின் சிறப்புகளை எடுத்து கூறினார்கள்.

செய்திகள் ; S.E.யாகோப் / எதிரொலி / 8939476777
