தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நடந்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கரிமணல் (தோணிரேவு) தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் வழிகாட்டுதலின் பேரில் பிரியா தலைவராகவும், கவிதா துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி உதவி ஆசிரியர் பவித்ரா,முன்னாள் மாணவர்கள் விநாயகமூர்த்தி, கணேஷ், ஆதித்யன், மதன்ராஜ், பெற்றோர் சத்தியராஜ், சித்ரா மற்றும் கல்வியாளர் அற்புதம் ஆகியோர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றனர்.

பழவேற்காடு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகம்மை பார்வையாளராக கலந்துக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி உரையாற்றினார்.
செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
