மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பர் மாவட்டத்தை சேர்ந்தவர் சைண்டேன் ஸ்வப்னிலா அனில். பி.டெக் பட்டதாரியான இவர் 2022-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றார். சிவில் சர்வீஸ் தேர்வில் 2023 பேட்ஜ் தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார்.
அவருடன் பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் ஏ.எஸ்.பி யாக பயிற்சியில் இருந்து வந்தனர். பயிற்சி முடித்த 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பல்வேறு மாவட்டங்களுக்கு ஏ.எஸ்.பிக்களாக நியமித்து கடந்த 31-ம் தேதி கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் ஏ.எஸ்.பியாக பயிற்சியில் இருந்த சைண்டேன் ஸ்வப்னிலா அனில் ராஜபாளையம் ஏ. எஸ். பி. யாக பொறுப்பேற்றார்.
செய்திகள் ; ராமகிருஷ்ணன் /எதிரொலி / 8939476777
