கிருஷ்ணகிரி மாவட்டம், 7சூளகிரியில் அடகு வைத்த நகையை மீட்கக் கொண்டு வந்த ரூபாய் 10 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்து விட்டு தப்பி சென்ற பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து பணத்தை மீட்டத்தர வேண்டி வீ கோல்ட் நிறுவனத்தின் நகை மதிப்பீட்டாளர் காவல் கண்காணிப்பாளரிடம்கண்ணீர் மல்க புகார் மனுவினைக் கொடுத்தார்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தொலைபேசி மூலம் வீ கோல்ட் நிறுவனத்தில் பணிபுரியும் முகேஷ்சிடம் தனது மனைவி சுஷ்மிதா பெயரில் சூளகிரி முத்தூட் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் நிறுவனத்தில் தங்க நகை அடகு வைத்துள்ளதாகவும் அடகு வைத்துள்ள நகையை மீட்டு நகையை விற்றுவிட்டு மீதி உள்ள பணத்தை தங்களுக்கு கொடுக்குமாறு கேட்டதோடு அடகு வைத்த ரசீது மற்றும் ஆதார் என்னையும் அவரது வாட்ஸ் அப் எண் மூலம் அனுப்பி வைத்துள்ளதை அடுத்து கடந்த மாதம் 11 ம் தேதி கோவிந்தராஜ் சூளகிரிக்கு ரூ.10 லட்சத்துடன் முகேஷ் வந்துள்ளார்.

ஏற்கனவே அங்கு தயார் நிலையில் இருந்த கோவிந்தராஜ், அவரது மனைவி சுஷ்மிதா அவரது சகோதரர் சுஜித்குமார் மற்றும் நதீம், மதி ஆகியோரிடம் முகேஷ் அறிமுகப்படுத்தி உள்ளார். பின்னர் சூளகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ்க்கு செல்ல முற்பட்ட போது கோவிந்தராஜ் தீடீரென கத்தியைக் காட்டி மிரட்டியதோடு கொலை செய்து விடுவோம் என மிரட்டி முகேஷ் கொண்டு வந்த ரூ 10 லட்சத்தை பறித்து விட்டு அவர்கள் வந்த காரில் தப்பி சென்றுள்ளனர்.

இதனை கண்டு மிரண்டு போன முகேஷ் இது தொடர்பாக சூளகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தும் இது வரை குற்றவாளிகளை காவல் துறையினார் கைது செய்யாமல் முகேசை அலைக்கழித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முகேஷ் தனது தந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனுவினை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முகேஷ் சூளகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகையை மீட்டுத் தருமாறு கோவிந்தராஜ் என்பவர் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததின் பெயரில் பணம் 10 லட்சத்துடன் சூளகிரிக்கு வந்தோம்.

அப்போது கோவிந்தராஜ், அவரது மனைவி சுஷ்மிதா உள்ளிட்ட 5 பேர் உடன் இருந்தாங்க தீடீரென கோவிந்தராஜ் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் கத்தியை காட்டி கொலை செய்து விடுவோம் பணத்தை கொடுத்து விட்டு ஓடி விடுங்கள் என்று கூறி ரூ 10 லட்சம் பணத்தை பறித்து கொண்டு, காரில் தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக சூளகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பல நாள்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் மீது காவல் துறையியினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை, அவர்களையும் கைதும் செய்யாமல் எங்களை அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இதனால் மன வேதனையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் கொடுத்து உள்ளோம். அவர்களாவது இனியாவது குற்றவாளிகளை கைது செய்து என்னிடம் இருந்து பறித்து சென்ற 10 லட்சம் பணத்தினை மீட்டுத்தர வேண்டும் என்று க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாண்ணீர் மல்க தெரிவித்தார்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed