விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுந்தரராஜபுரம், கணபதிசுந்தரநாச்சியார்புரம், சோலைசேரி, சேத்தூர், தளவாய்புரம், சோழபுரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மது விற்பனை அதிகரித்து வருவதாக பலரும் குறை கூறி வரும் வேளையில், கடந்த சில நாட்களாக மது போதையில் இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சேத்தூர் பேருந்து நிலையம் எதிரே பட்டப்பகலில் போதை இளைஞர்களால் மணிகண்டன் என்ற வாலிபரை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை நடந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் புதிய பேருந்து நிலையத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் இரண்டு கல்லூரி மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி பேருந்து வளாகத்தை கலங்கடித்தனர்.

இதே தளவாய்புரத்தில் போதை இளைஞர்களால் ஸ்டீபன் என்ற வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இரண்டு தினங்களுக்கு முன் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி தலைவர் தணிகாசலம் என்பவரை , மது போதையிலிருந்த இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். இந்த சம்பவங்கள் புறக்காவல் நிலைய வாசலிலேயே நடந்தேறியது. சர்வசாதரனமாக போதை ஆசாமிகள் குற்ற சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

இப்படியான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் ராஜபாளையம் டி.எஸ்.பி. பசினா பீவி, மற்றும் ஆய்வாளர்கள். ரமேஷ்கண்ணன் ( சேத்தூர்) குருவுத்தாய் (தளவாய்புரம்)
தர்மராஜ் ராஜபாளையம் (தெற்கு) வடக்கு (பொறுப்பு) ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரம் கூறுகையில். குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை சரியாக திட்டமிட்டு தேவையான ரோந்து பணிகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்தல் வாகன சோதனைகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் வேளையில் இதில் ஈடுபடுத்தப்பட்ட போலீசாரை மொத்த பேரையும் உயரதிகாரிகள். அயலக பாதுகாப்பு பணிகளுக்கு அழைத்து கொள்கின்றனர். இதனால் எங்களது திட்டமிடல் பணிகள் அனைத்திலும் தொய்வு ஏற்படுகிறது. ஆனாலும் அனைத்து வழக்குகளிலும் உடனடியாக குற்றாவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலவரம் இப்படி இருக்க காவலர்கள் மீது நடவடிக்கை அதில் ஏதாவது எடுப்பதால், காவலர்களின் குடும்பமே
மன உழைச்சலுக்கு உள்ளாகிவருகிறோம் என்று புலம்புகின்றனர்.

செய்திகள் ; ராதாகிருஷ்ணா ராஜா எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed