மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு மகாத்மா காந்தி எட்டாவது தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் இவரது குழந்தை யாஷிகா (வயது 4) படுக்கை அறையில் உள்புறமாக சென்ற பிறகு தாப்பாள் போட்டு இருக்கிறார். பின்னர் குழந்தை யாஷிகா அந்த அறையின் கதவை திறக்க முயற்சி செய்து திறக்க முடியாத சூழ்நிலையில், பயந்து போய் அழத் தூங்கி இருக்கிறார்.

அதன் பிறகு சூழ்நிலையைப் புரிந்து கொண்ட பெற்றோர்கள் கதவை திறக்க முயற்சி செய்தும் முடியாத சூழ்நிலையில், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து கதவை திறக்க எவ்வளவு முயன்றும் திறக்க முடியவில்லை.

அதனால், பதறிப்போன பெற்றோர்கள் உடனடியாக அனுப்பானடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் தொடர்ந்து அவர்கள் தீயணைப்பு துறை ஆய்வாளர் கணேஷ் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள் கதவை உடைக்காமல், பாதுகாப்பாக கதவை திறந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed