மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில், அதிகாலை முதலே நோயாளிகள் சிகிச்சை பெற நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இரந்து வருகிறது.

மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக புறநகர் பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையாக கருதப்படக்கூடியது திருமங்கலம் அரசு மருத்துவமனை தான், இந்த மருத்துவமனை நிர்வாகம் இந்த மருத்துவமனையில் பணி புரியக்கூடிய மருத்துவர்களை மாற்று பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் இல்லாததால் இந்த மருத்துவமனைக்கு புறநோயாளியாக வரக்கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும், பல மணி நேரம் காத்துக் கிடந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்படுவதுடன், சீட்டு பதிவதற்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால், உடல் உபாதையுடன் மருத்துவமனை நோக்கி வரக்கூடிய புற நோயாளிகள் வெகு நேரம் வரிசையில் கால் கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலையும்,கைக்குழந்தையுடன் மருத்துவமனைக்கு வரக்கூடிய பெண்களும் அவதியுறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
