கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எரிவாயு முகவர்களின் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி மஞ்சுளா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் திருமதி கீதாராணி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் அந்தோணசாமி, குடிமைப்பொருள் வழங்கல் பறக்கும் படை வட்டாட்சியர் பூவிதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இக்கூட்டத்திற்கு சமுகநுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக சந்திரமோகன் கலந்துகொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி பொது மக்களுக்கு எந்த விதமான குறைபாடுகளின்றி எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் செய்து வருகிறது, தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி மஞ்சுளா அவர்களது உத்தரவின்படி மாவட்ட குடிமைபொருள் தனி வட்டாட்சியர்கள் மற்றும் பறக்கும்படை வட்டாட்சியர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதற்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

மேலும் இந்த கூட்டத்தின் போது சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாதேஷ், மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி பத்மா, மாநில துணைத் தலைவர் ஜெய்சன் மற்றும் நுகர்வோர் சங்கத்தினை சேர்ந்த ஜாய், சையத் அஸ்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed